சிகை அலங்கார பாகுபாடுக்கு எதிரான சட்டமூலம்: பிரான்ஸ் நாடாளுமன்றம் அனுமதி

OruvanOruvan

against hair discrimination

சிகை அலங்காரங்களுக்கு எதிராக பணியிடங்களில் பாகுபாடு காட்டுவதை தடை செய்வதற்கு பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், செனட் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பணியிடங்களில் தம் விருப்பத்திற்கமைய சிகை அலங்காரம் செய்வதை தடுக்கும் வகையில் முன்னதாக பிரான்ஸில் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், பணியிடங்களில் பாகுபாட்டை எதிர்கொண்டவர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கறுப்பின மக்களுக்கு இந்த சட்டம் ஆதரவளிக்கும் என நம்பப்படுகிறது.

இந்த சட்டமூலம் இனம் சார்ந்த பாகுபாட்டை குறைக்காத போதிலும், அதற்கான முதல் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் - குவாதலூப் நாடாளுமன்ற உறுப்பினர் ஒலிவியர் செர்வா (Olivier Serva) என்பவரால் இந்த விடயம் கேள்விக்குட்படுத்தப்பட்டது.

ஒலிவியர் செர்வாவால் முன்வைக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில், கறுப்பின பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் தமது சிகை அலங்காரம் காரணமாக தொழிலை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பின்னணியிலே, பணியிடங்களில் சிகை அலங்காரத்துக்கு எதிராக பாகுபாடு காட்டுவதை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.