ஜனாதிபதி ஏர்டொகனை தோற்கடிக்க வேண்டும்: எதிர்கட்சியினர் தீவிரம்

OruvanOruvan

Turkey

துருக்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஜனாதிபதி தையிப் ஏர்டொகனை தோற்கடிக்க வேண்டும் என இஸ்தாபுள் மேயர் எக்ரெம் இமாமோக்லு (Ekrem Imamoglu) தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏர்டொகனின் கட்சி வெற்றிபெற்றிருந்தது.

இந்த நிலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கம், குர்திஷ் போராளிகளின் தாக்கம் என்பன நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஏர்டொகனின் கட்சி இஸ்தாபுள் மற்றும் அங்கரா ஆகிய மாநிலங்களில் தோல்வியடைந்திருந்தது.

இருந்த போதிலும் ஏர்டொகன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார்.

அந்த நிலையில் எதிர்வரும் தேர்தலானது எதிர்க்கட்சியினருக்கு தீர்மானமிக்க தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.