நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக புலம்பெயர்ந்தோர் போராட்டம்: பாரிஸ் விமான நிலையத்தில் மோதல் - வைரலான காணொளி

OruvanOruvan

Paris Airport Viral Video

பிரான்ஸில் இருந்து மீள அனுப்பப்பட்ட நபர் ஒருவரை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் புலம்பெயர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் போராட்டத்தில் வன்முறையாக மாறிய நிலையில், விமான நிலைய பணியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணொளியில் பதிவாகியுள்ள விடயங்களை மாத்திரம் வைத்து சம்பவத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய முடியாதுள்ள போதிலும், நிலைமை மோசமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

குடியிருப்புகள் அற்ற மக்கள் இடம்பெயர்வது பிரான்ஸில் தற்போது பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயரும் மக்கள், குடியிருப்புகள் அற்ற நிலையில் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலைமையை சமாளிக்க முடியாத நகர மேயர் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெறிக்கின்றன.

இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்குள் 100,000 பேர் வசிக்கும் தமது நகருக்குள் 500 குடியேற்றவாசிகள் முன்னறிவிப்பு இன்றி வருகைத்தந்துள்ளதாக ஆர்லியன்ஸின் வலதுசாரி மேயர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

பெரும்பாலும் ஆபிரிக்கா, தெற்காசியா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் நாடுகளைச் சேர்ந்த வீடற்ற புலம்பெயர்ந்தோர் மிகவும் விரும்பும் இடமாக பாரிஸ் கருதப்படுகிறது.

இவ்வாறு பிரான்ஸிற்கு வருகைதரும் புலம்பெயர்ந்தோர் குறுகியகால அவசர தங்குமிடங்களை கோரும் நிலை காணப்படுகிறது.

இருப்பினும், புலம்பெயர்ந்தோருக்கு தங்குமிடங்களை வழங்குவதற்கு போதுமான இடம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ தங்குமிடம் மறுக்கப்படும் நிலையில், வீதிகளில் தற்காலிக கூடாரங்களை அமைத்து குடியேறுவோரை நிர்வகிப்பது பிராஸ் அதிகாரிகளுக்கு சவாலான விடயமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.