கனடாவின் மக்கள் தொகை கணிசமாக அதிகரிப்பு: இந்தியர்கள் ஆதிக்கம்

OruvanOruvan

கனடாவின் மக்கள் தொகை 2023 இல் 40.77 மில்லியனை எட்டியுள்ளது. தற்காலிக குடியேற்றங்களால் இவ்வாறு சனத் தொகை வளர்ச்சி கண்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மாத்திரம் கனடாவின் மக்கள் தொகையில் 1.27 மில்லியன் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 3.2 சதவீதம் அதிகமாகும்.

இந்தியர்கள் அதிகம் புலம்பெயர்ந்த நாடாக மாறும் கனடா

1957 ஆம் ஆண்டுக்கு பிறகு கனடாவின் மிக உயர்ந்த சனத் தொகை வளர்ச்சியாகவும் இது பதிவாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டில், கனடாவின் மக்கள்தொகை வளர்ச்சியில் 97.6 சதவீதம் சர்வதேச இடம்பெயர்வு (நிரந்தர மற்றும் தற்காலிக குடியேற்றம்) மற்றும் எஞ்சிய 2.4 சதவீதம் இயற்கையான அதிகரிப்பில் இடம்பெற்றுள்ளது.

கனடா விசா இணையதளத்தின்படி, "ஒவ்வொரு ஆண்டும் 120,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக குடியேறுகிறார்கள். உலகின் மிகப்பெரிய இந்தியர்கள் புலம்பெயர்ந்த நாடாக கனடா உள்ளது.

கனடாவில் 2013 இல் நிரந்தர குடியுரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 32,828 ஆக இருந்தது. ஆனால், 2022 இல், இந்த எண்ணிக்கை 260 சதவீதம் அதிகரித்து 118,095 ஆக உள்ளது.

2023 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பதட்டங்கள் காரணமாக புலம்பெயர்வு சதவீதம் குறைந்துள்ளது.

குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) தரவுகளின்படி, டிசம்பர் மாதத்திற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2022 இல் 16,796 இல் இருந்து 2023 இல் 6,329 ஆகக் குறைந்துள்ளது.

இதேவேளை, ஏனைய நாடுகளில் இருந்தும் மக்கள் அதிகமாக கனடாவுக்கே புலம்பெயர்ந்து வருகின்றனர்.