இந்தியாவிலும் அனைவரது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் ஐ.நா.: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

இந்தியாவிலும் அனைவரது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் ஐ.நா.

“தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என் ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் கார் கவிழ்ந்து விபத்து - 10 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஜம்மு - காஷ்மீரில் காரொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

OruvanOruvan

கிரீஸில் நிலஅதிர்வு - சுனாமி எச்சரிக்கை

கிரீஸின் தெற்குப் பகுதியில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு ப்ரைகோஸிலிருந்து தென்மேற்கே 56 கிமீ தொலைவில் இன்று காலை 6 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண் கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டார் போப் பிரான்சிஸ்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப் பிரான்சிஸ் பெண் கைதிகளின் பாதங்களைக் கழுவி பாரம்பரிய சடங்கை மேற்கொண்டார். இந்த சடங்கைச் செய்ய, போப்பாண்டவர் ரோமின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ரெபிபியா சிறைச்சாலைக்குச் சென்றார்.

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan

'Titanic' movie

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - 45 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர். ஜோகன்னஸ்பர்க் அருகே மமத்லகாலா பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது. ஈஸ்டர் கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மோரியா சென்ற குறித்த பேருந்தே விபத்தில் சிக்கியது.

சீன வெளியுறவு அமைச்சர் - பெனினிய வெளியுறவு அமைச்சர் இடையில் சந்திப்பு

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பெய்ஜிங்கில் தனது பெனினிய வெளியுறவு அமைச்சர் ஷெகுன் அட்ஜாடி பக்காரியை சந்தித்துள்ளார். இதன்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

ஒபாமா மற்றும் கிளிண்டனுடன் இணைந்து நிதி திரட்டும் பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமது முன்னோடிகளான பராக் ஒபாமா மற்றும் பில் கிளிண்டன் ஆகியோருடன் இணைந்து, நியூயார்க் நகரில் நிதி திரட்டும் நிகழ்வொன்றை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்காவில் கோர விபத்து

தென்னாபிரிக்காவின் மாமட்லாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

லிம்போபோ, மோரியாவில் உள்ள தேவாலய ஆராதனையில் கலந்துகொள்வதற்காக போட்ஸ்வானாவில் இருந்து பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. 46 பேரில் சிறுமியொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

'டைட்டானிக்' கதவு ஏலத்தில் விற்பனை

அமெரிக்காவில் உள்ள 'பிளெனட் ஹாலிவுட்' என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்கள் மற்றும் ஆடைகளின் ஏலத்தில் 'டைட்டானிக்' திரைப்படத்தில் ரோஸை காப்பாற்ற பயன்படுத்தப்பட்ட கதவானது 718,750 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் புதிய தயாரிப்பு

ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம், எதிர்வரும் தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த விமானத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.