தாய்லாந்தில் ஓரின திருமணத்திற்கு அனுமதி: ஓரினச் சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி

OruvanOruvan

Thailand

தாய்லாந்து பாராளுமன்றம் திருமண சமத்துவ சட்டமூலத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த சட்டநகர்வு ஒரு மைல்கல் என ஓரினச் சேர்க்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசியாவில் தாராளக் கொள்கையினை பின்பற்றும் மிகப் பெரிய நாடான தாய்லாந்தின் நகர்வானது பரவலாக பேசப்பட்டுவருகின்றது.

ஓரினச் சேர்க்கை தொடர்பான சட்டமூலத்திற்கு பெரிய கட்சிகள் அனைத்தும் ஆதரவு வழங்கியிருந்தன.குறித்த சட்டம் தொடர்பான தயாரிப்புக்கள் கடந்த பத்து வருடங்களாக இடம்பெற்றுவந்துள்ளன.

இந்த நிலையில் குறித்த சட்டமூலத்திற்கு செனட் சபை அனுமதி வழங்க வேண்டி தேவையுள்ளது.மேலும் அரசரின் அனுமதியுடன் குறித்த சட்டம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.