சந்தேகநபர்கள் சித்திரவதை: மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு

OruvanOruvan

ரஷ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழு குற்றம்சுமத்தியுள்ளது.

இதேவேளை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கிர்கிஸ்தான் (Kyrgyzstan) சேர்ந்த ஒருவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தஜிகிஸ்தானை (Tajikistan) சேர்ந்த நான்கு பேரின் குடும்பங்களை விசாரணை செய்ய விசாரணை குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை எட்டு பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.