பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலையில் முன்னேற்றம்: ஈஸ்டர் ஆராதனைக்கு தயாராகிறார்

OruvanOruvan

Pope Francis

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உடல்நலம் தேறிவருவதாக வத்திகான் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஈஸ்டர் ஆராதனைகள் பாப்பரசர் கலந்து கொள்வார் எனவும் வத்திகான் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்து உடல் நிலை பாதிப்படையும் திருத்தந்தை

கடந்த28ஆம் திகதி அளவில் திருத்தந்தை போப் பிரான்சிஸ் சளி, மூச்சு குழாய் அழற்சி மற்றும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டடுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மேலும், போப் பிரான்சிஸ் வாராந்திர பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கினாலும் பிரசங்கம் செய்ய முடியாது தனது உதவியாளரை படிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

உடல் நலம் தேறிய திருத்தந்தை

87 வயதுடைய பாப்பரசர், வாரந்த பிரசங்கத்தை முழுமையாக கடந்த வாரம் வாசித்திருந்தார். இந்த நிலையில் முன்பிருந்ததைவிட தற்போது அவரின் உடல் நலம் அதிகரித்துள்ளது.

ரஷ்ய-உக்ரைன் போருக்கு இராஜதந்திர தீர்வை காணுமாறு கோரிக்கை

மேலும், மத்திய கிழக்கு மற்றும் உக்ரைய்னில் அமைதி ஏற்பட வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஹமாஸ் போரில் தமது பிள்ளையை இழந்துள்ளதாகவும் போருக்கு இராஜதந்திர ரீதியான தீர்வை எட்டவேண்டும் எனவும் பாப்பரசர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

இதேவேளை, வத்திக்கான் மாநில ஹெலிபோர்ட்டில் இருந்து நாளையதினம் (ஏப்ரல் 28 ஆம் திகதி) வெனிஸுக்குச் செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் அவர் வெனிஸ் தடாகத்தை படகில் சுற்றி வருவார் என்று வத்திக்கான் மார்ச் 25 அன்று வெளியிட்ட செய்தியில் விபரிக்கப்பட்டுள்ளது.