மெக்டொனால்டு கிளைகளில் புதிய டோனட்கள்: பிரபல உணவுத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

OruvanOruvan

கிறிஸ்பி க்ரீம் Krispy Kreme (DNUT.O) நிறுவனம் அதன் டோனட்கள் இனி மெக்டொனால்டு கிளைகளில் (McDonald's (MCD.N) கிளைகள் முழுவதிலும் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து மெக்டொனால்டு கிளைகளிலும் கிறிஸ்பி க்ரீம் டோனட்கள் கிளைகள் உருவாக்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

2022ஆம் ஆண்டு ஒக்ரோபரில் தொடங்கிய கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லெக்சிங்டன், லூயிஸ்வில்லே மற்றும் கென்டக்கி பகுதிகளில் உள்ள 160 மெக்டொனால்டு உணவகங்களில் தற்போது கிறிஸ்பி க்ரீம் டோனட்கள் கிடைக்கபெறுவதாக நிறுவனம் கூறுகிறது.

10,000 உணவகங்களைத் திறக்கத் திட்டம்

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த திட்டம் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட உள்ளது.

மெக்டொனால்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் டிசம்பர் 31, 2026 வரை அமெரிக்காவில் உள்ள வேறு எந்த விரைவு சேவை உணவகத்திற்கும் டோனட்களை வழங்க மாட்டோம் என்று கிறிஸ்பி க்ரீம் கூறுகிறது.

மெக்டொனால்டு அமெரிக்காவில் சுமார் 14,000 கிளைகளை கொண்டுள்ளது. மேலும், 2027ஆம் ஆண்டுக்குள் உலகளவில் சுமார் 10,000 உணவகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுடன் தொடர்புடைய சில சர்வதேச சந்தைகளில் மெக்டொனால்டு நிறுவனத்திற்கு எதிரான புறக்கணிப்பு பிரச்சாரங்கள் மற்றும் சீனாவின் கடுமையான மைக்ரோ பொருளாதார நிலைமைகளின் விளைவாக மெக்டொனால்டு உணவகங்கள் சில சவால்களையும் எதிர்கொண்டுள்ளது.