உக்ரைனுடன் விவசாய இறக்குமதி உடன்படிக்கை - போலந்து அறிவிப்பு: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

World News Updates 28.03.2024

உக்ரைனுடன் விவசாய இறக்குமதி - போலந்து அறிவிப்பு

போலந்தும் உக்ரைனும் விவசாய இறக்குமதிகள் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். வார்சோவில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலுடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

OruvanOruvan

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகள் - உள்ளூர்வாசிகளின் இதயங்களை வென்றுள்ளதாக தகவல்

சீனாவில் புதிதாக மின்சார பேருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், ருவாண்டா தலைநகர் கிகாலியிலிருந்து பொது போக்குவரத்தை தற்போது ஆரம்பித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் வசதியான சவாரி அனுபவத்தின் மூலம் உள்ளூர்வாசிகளின் இதயங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கப்படுமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்படாது குறித்து தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி மேல்முறையீடு செய்துள்ளது. திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த தேர்தல்களில் ஒரு சதவீதம் அளவிற்கு கூட ஓட்டுகள் வாங்கவில்லை மற்றும் மூன்று ஆண்டுகளாக நிதி ஆண்டு அறிக்கையை சமர்பிக்கவில்லை எனதெரிவித்து பானை சின்னம் ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan

இந்திய மாலுமிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பைடன் பாராட்டு

அமெரிக்காவில் பால்டிமோா் நகர இரும்புப் பாலம் மீது மோதுவதற்கு முன்பே கப்பல் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதைப் பற்றி உள்ளூா் நிா்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்து, பெரும் விபத்தைத் தவிா்த்த இந்திய மாலுமிகளின் செயலுக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் அதிகாலை 5.44 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 124 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் வீடுகள் இலேசாக அதிர்ந்தது. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதிமுகவைச் சேர்ந்த எம்.பி. கணேசமூர்த்தி உயிரிழப்பு

விஷமருந்தி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மதிமுகவைச் சேர்ந்த எம்.பி. கணேசமூர்த்தியின் உயிர் இருதய செயலிழப்பால் பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 நிமிடங்களில் 4000 மின்னல் தாக்குதல்கள் பதிவு

தென்மேற்கு - புளோரிடா கடற்கரையிலிருந்து 15 நிமிடங்களுக்கு கிட்டதட்ட 4000 மின்னல் தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திவெயிட்டுள்ளன. புயோரிடாவில் கடந்த சில காலமாகவே மின்னல் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், கடந்த ஆண்டு சிறுமி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - எட்டு பேர் உயிரிழப்பு

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹெஸ்புல்லா போராளிகள் உட்பட சுமார் 08 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எல்லையோர பகுதியான டெயார் ஹர்பாவில் ( Tair Harfa) மேற்கொள்ளளப்பட்ட வேலை நிறுத்தத்தின் போது ஐவரும் உணவகமொன்றில் மூவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஸ்கோவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலர் காணாமற்போயுள்ளதாக தகவல்

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இதுவரை 95 பேர் காணாமற் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 104 என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும் - ஸ்டாலின்

சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.புதிய வாக்குறுதிகளைக் கொடுத்தால், நிறைவேற்றப்படாதவற்கை மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி எண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார்.