சூரிய கிரகண நாளில் அதிகரிக்கும் மரணங்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

OruvanOruvan

  • சூரிய கிரகண நாளில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 50% அதிகரிக்கும்

  • சுமார் 3.7 மில்லியன் மக்கள் கிரகணத்தை பார்க்க பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • 2017 ஆம் ஆண்டில், அபாயகரமான விபத்துகள் ஒட்டுமொத்தமாக 31% அதிகரிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நிகழவுள்ள சூரிய கிரணகத்தின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்து மரணங்கள் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது பதிவான போக்குவரத்து தரவுகளை மேற்கோள்காட்டி டொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு சூரிய கிரணத்திற்கு முன்பும், பின்பும் வாகன விபத்துகளால் அமெரிக்கா முழுவதும் 1,000 மரணங்கள் பதிவாகியுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக வாகன விபத்துகளினால் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 114 ஆகும். எனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சூரிய கிரகணத்தின் வாரத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 189 உயிரிழப்புகள் பதிவாகின.

ஏப்ரல் எட்டாம் திகதி சூரிய கிரகணத்தின் போது மைனே, கென்டக்கி, இடாஹோ, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 3.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

டெக்சாஸ், கிரகணத்தைப் பார்ப்பதற்கான முக்கிய இடமாக இருப்பதன் காரணமாக 270,000 முதல் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பயணிப்பார்கள் எனவும் அதே நேரத்தில் இந்தியானா 131,000 முதல் 522,000 பேர் வரை பயணிப்பாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சூரிய கிரகணத்தின் முந்தைய நாட்களில் ஹோட்டல் கட்டணம் அதிகரித்துள்ளதுடன், முன்பதிவுகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கடி, டெக்சாஸில் ஹோட்டல் விலைகள் 81 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், கிளீவ்லேண்ட் மற்றும் ஆஸ்டினில் விலைகள் முறையே 33 மற்றும் 34 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவில் சூரிய கிரகணத்தை முதன் முறையாக பார்க்க முடியும் என்பதால் கிரகணத்தின் போது போக்குவரத்து அபாயம் 95 சதவீதம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வதற்கு மக்களின் வருகையில் ஏற்படும் அதிகரிப்பு காரணமாக இருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

அறிமுகமில்லாத வீதிகளில் வாகனம் ஓட்டுபவர்கள், சரியான நேரத்தில் கிரகணத்தைப் பார்க்க வேகமாகச் செல்வது, வாகனம் ஓட்டும்போது கவனச்சிதறல் மற்றும் போதைப்பொருள் அல்லது மதுபோதை ஆகியவை பிற சாத்தியமான காரணிகள் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.