அமெரிக்க முக்கிய அதிகாரிகளை சந்தித்தார் ஜி ஜிங்பிங்: பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் இல்லை

OruvanOruvan

President Xi

சீனா ஜனாதிபதி ஜி ஜிங்பிங் (Xi Jinping) அமெரிக்காவின் முக்கிய தரப்பினரை பாராளுமன்றில் (Great Hall of the People) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அந்த வகையில் அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் சிலரை இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதனை அரச ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க அதிகாரிகளுடன் இரவு விருந்தில் சீன ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.

குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை ஊடகங்களுக்குத் தெரிவிக்கவில்லை.