இலங்கை நோக்கி வந்த கப்பல் பாலம் மீது மோதி விபத்து: காணாமல் போன கட்டுமானப் பணியாளர்கள் - தேடுதல் நடவடிக்கை தீவிரம்

OruvanOruvan

காணாமல் போன கட்டுமானப் பணியாளர்கள் - தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அமெரிக்கா -பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குளானதில் கட்டுமானப் பணியாளர்கள் ஆறு பேர் நீரில் முழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவசரகால பணியாளர்கள் படகுகள் மற்றும் கெலிகொப்டர்கள் ஊடாக காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் தேடுதல் நடவடிக்கையில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரம்

மேரிலேண்ட்டில் சரக்கு கப்பல் ஒன்று மோதி பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் நீரிழ் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலம் இவ்வளவு விரைவாக இடிந்து விழுந்தமை தொடர்பில் பலரும் கேள்வியெழுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாபாலம் இயல்பாகவே gாலம் பாதுகாப்பற்றதாக இல்லை என்றாலும், அதன் 'மெலிதான' துணை அமைப்புகள் சேதமடைந்தால் இடிந்து விழும் வாய்ப்புள்ளது என்று பொறியிலாளர்கள் விளக்கியுள்ளனர்.

22 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்பு

மேரிலேண்ட்டில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் மோதிய கொள்கலன் கப்பலில் இருந்த 22 பேர் கொண்ட பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் இந்தியர்கள் எனவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கப்பல் நிர்வாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேரிலேண்ட் மாநிலத்தில் அவசரநிலை

பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததையடுத்து மேரிலேண்ட் மாநிலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பைடன் நிர்வாகத்திலிருந்து மத்திய சேவைகளை பெறும் வகையில் இடைநிலைக் குழுவொன்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அம்மாநில ஆளுநர் வெஸ் மூர் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய பல வாகனங்கள் உட்பட ஏழு பேரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கப்பலிருந்த பணியாளர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

OruvanOruvan

இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மீது இடிந்து வீழ்ந்த பாலம்

அமெரிக்காவில் பாலமொன்றின் மீது சரக்கு கப்பல் ​மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

மேரிலேண்ட்டில் அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது சரக்கு கப்பல் இன்று அதிகாலை மோதியுள்ளது.

இதன்போது பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த “டாலி“ என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கப்பல் கொழும்பு நோக்கி பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.