சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல் நலனில் முன்னேற்றம்: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - World News

சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல் நலனில் முன்னேற்றம்

மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்ததை விட ஆன்மிகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், உடல் நலனில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சுமார் 10 நாட்கள் சிகிச்சைகளுக்கு பின்னர் சத்குரு இன்று (27) வீடுதிரும்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

OruvanOruvan

உலகின் மிகப்பெரிய அனகோண்டா மர்மமான முறையில் உயிரிழப்பு - கொலை என சந்தேகம்

உலகின் மிகப்பெரிய பாம்பு என விலங்கியல் வல்லுநர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய 26 அடி நீளமான அனகோண்டா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

OruvanOruvan

OruvanOruvan

32 வருடங்களின் பின்னர் ஜப்பான் யென்னின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ஜப்பானிய யென்னின் பெறுமதி கடந்த 34 ஆண்டுகள் காணாத அளவு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ஜப்பானிய ‘யென்’னின் பெறுமதி 151.97ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் சவுதி அரேபியா

சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது. இதன்படி 2024 பிரபஞ்ச அழகி போட்டியில் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த 27 வயதான மாடல் அழகி ரூமி அல்காதானி பங்கேற்க உள்ளார்.

OruvanOruvan

சீனாவுக்கு புதிய சவால்

சீனாவில் இளம் தலைமுறையினரிடையே திருமணம் மற்றும் விவாகரத்து போன்ற போக்கை நிர்வகிக்கும் சவாலை சீனா எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மஹாராஷ்டிராவின் சட்டசபை இடைத்தேர்தலை இரத்து செய்தது உயர் நீதிமன்றம்

மஹாராஷ்டிராவின் அகோலா மேற்கு சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 26ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் கமிஷனின் அறிவிப்பை உயர் நீதிமன்றம் நேற்று இரத்து செய்தது.

தாய்வானில் இருந்து சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்

தைவானில் இருந்து 30 பௌத்த கலாசார நினைவுச்சின்னங்கள் சீனாவுக்கு மீள அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நினைவுச் சின்னங்கள் சுங்குவாவில் உள்ள ஐக்கிய மனிதநேய பெளத்த சங்கத்தை சேர்ந்த சுமார் 200 பேர் கொண்ட குழுவால் பெய்ஜிங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

சிரியா மீதான தாக்குதலில் உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழப்பு

சிரியாவின் கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊழியர்கள் மற்றும் ஈரானின் இராணுவ ஆலோசகர் உள்ளிட்டோர் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ப்ளோரிடாவில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டமூலத்தில் ப்ளோரிடா கவர்னர் ரொனால்ட் டியோன் டெசன்டிஸ் (Ronald Dion DeSantis) கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மெடா மற்றும் டிக்டொக் போன்ற சமூக ஊடக கணக்குகளை வைத்திருப்பதற்கு பெற்றோரின் அனுமதி அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.