புளோரிடாவில் புதிய சட்டம்: சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை

OruvanOruvan

அமெரிக்காவின் சில மாநிலங்களில் அண்மைக்காலமாக சமூக ஊடக பயன்பாட்டில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சிறுவர்கள் சமூக ஊடகத்தில் அதிக நேரங்களை செலவிடுகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு மன அழுத்தங்களை எதிர்கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் சிறுவர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதை குறைக்க பல மாநிலங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் பிரகாரம் புளோரிடா மாநிலத்தில் 14 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

14 மற்றும் 15 வயது சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த விரும்பினால் தங்கள் பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும்.

இதற்கான சட்டமூலத்தில் புளோரிடா ஆளுநர் ரோன் டிசேன்ட்டிஸ் மார்ச் 25இல் கையெழுத்திட்டார்.

சமூக ஊடகத் தளங்கள் மூலம் ஏற்படும் மனநலப் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களை இந்தப் புதிய சட்டம் பாதுகாக்கும் என்று டிசேன்ட்டிசின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.