பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்திற்கு பேராசிரியர்கள் ஒத்துழைப்பு: சுகாதாரத்துறை வீழ்ச்சியடையும்

OruvanOruvan

South Korea

தென்கொரியாவில் பயிற்சி மருத்துவர்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு மருத்துவத்துறை பேராசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

பணி நேரத்தை குறைத்து தமது ஆதரவினை வழங்கவுள்ளனர்.இதன் மூலம் மருத்துவத்துறை மேலும் ஸ்தம்பிதமடையும் நிலையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கொரிய அரசாங்கம்,மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மருத்துவ கல்லூரிக்கான அனுமதியை அதிகரிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பயிற்சி மருத்துவர்கள் கடந்த ஒருமாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மருத்துக் கல்லூரிக்கு மாணவர்களை அதிகரிப்பதானது நாட்டின் மருத்துவத்துறைக்கு பாதிப்பாக அமையும் என மருத்துவ பேராசிரியர் சங்கத்தலைவர் கிம் சாங் சூ (Kim Chang-soo) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார்.