மைக் சின்னம் வேண்டாம் - சீமான்: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - World News

மைக் சின்னம் வேண்டாம் - சீமான்

நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டில் உள்ள 39 மற்றும் புதுசேரி உட்பட 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக நேற்றுமுன்தினம் அறிவித்ததுடன், தமது வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார் சீமான். விவசாயி சின்னம் பறிக்கப்பட்டு நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதனை நிராகரித்துள்ள சீமான் வேறு சின்னத்தை தருமாறு தேர்தல் ஆணையகத்திட்டம் கோரியுள்ள சீமான்

மலேசியாவில் தேனீரின் விலை உயர்வு

மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் கடந்த மூவாண்டுகளில் சராசரியாக ஒரு குவளை தேனீரின் விலை சுமார் 70 வீதம் அதிகரித்துள்ளது. தேனீர் கடைகளில் விற்கப்படும் ஒரு குவளை தேனீரின் விலை முன்பு 1.50 ரிங்கிட்டாக (0.45 வெள்ளி) இருந்தது. இப்போது அதன் விலை கிட்டத்தட்ட 2.60 ரிங்கிட் வரை அதிகரித்துள்ளது. கடையில் அருந்தாமல் வாங்கிச் சென்றால் விலை 2.80 ரிங்கிட்டுக்கும் அதிகமாக இருக்கும்.

கிம் ஜொங் உன்னை சந்திக்க விரும்பும் ஜப்பான் பிரதமர்

தனது சகோதரரும் வடகொரியத் தலைவருமான கிம் ஜோங் உன்னுடன் சந்திப்பு நடத்த ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கி‌ஷிதா கேட்டுக்கொண்டார் என்று கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார். எனினும், டோக்கியோவின் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

OruvanOruvan

ஸ்பெயினில் புதிய ரோபோ நாய்

ஸ்பெயினில் புதிய ரோபோ நாய் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலகா பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ நாயை அந்நாட்டு பொலிஸார் ரோந்துக்கு பயன்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

OruvanOruvan

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் மீட்பு

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட 280 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் ஒருங்கிணைப்பில் மாணவர்கள் மீட்கப்பட்டதாக கடுனா மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு மத்தியிலும் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம்

யுத்தத்திற்கு மத்தியிலும் ஜெருசலேமின் புனித மவுண்ட் ஆஃப் ஆலிவ்ஸில் நடந்த குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டங்களில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ விசுவாசிகள் கலந்து கொண்டனர். பிராந்தியம் முழுவதும் மோதல்கள் அதிகரித்து வருவதால் பலரால் இதில் கலந்து கொள்ளமுடியவில்லை எனவும் வருத்தம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கதால் ஐவர் உயிரிழப்பு - 1000 வீடுகள் சேதம்

பப்புவா நியூ கினியாவில் நேற்று அதிகாலை பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஐவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். மேலும் இதுவரை 1000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற வானிலை - பிரேஸிலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரேஸிலில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ சாண்டோ ஆகிய இரண்டு மாநிலங்களில் சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பிரேஸிலின் தென்கிழக்கு மலைப்பகுதிகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் மீட்புக்குழுவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பை பலப்படுத்தும் பிரான்ஸ்

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ மீதான தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் அரசாங்கம் பயங்கரவாத எச்சரிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் பிரதமர் கேப்ரியல் அட்டல் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.