போலந்து வான்பரப்பின் ஊடாக உக்ரைய்ன் மீது தாக்குதல்: உட்கட்டமைப்பு வசதிகள் அழிப்பு

OruvanOruvan

Polish airspace

உக்ரைய்னின் மேற்குப் பகுதியான லிவிவ்வின் (Lviv) உட்கட்டமைப்பு வசதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதல் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

போர் கப்பலில் இருந்து குறித்த ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏவுகணை தமது வான்பரப்பின் ஊடாக பயணித்திருந்ததாக போலந்து குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைய்ன் தலைநகர் கீவ்வை (Kyiv) இலக்காகக் கொண்டு இதுவரை 57 ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் உக்ரைய்னின் சக்தி உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.