கனடா செல்ல ஆசைப்படுகிறீர்களா?: தொழில் வாய்ப்பை வழங்கும் முக்கிய மாநிலம்

OruvanOruvan

உலகில் மிகப்பெரிய நாடுகளில் கனடாவும் ஒன்றும். இங்கு நிலப்பரப்புக்கு ஏற்ப மக்கள் தொகை இல்லை என்பதுடன், பலநாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் இங்கு தொழில்துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கனடாவுக்கு சென்றால் அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியென அங்குள்ள புலம்பெயர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், பல்வேறு சட்டவிரோதமான வழிகளை பின்பற்றியாவது கனடாவுக்கு செல்ல வேண்டுமென்பதில் உலகளாவிய ரீதியில் பலரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் நிரந்தர வதிவுரிமை பெறுவது குறித்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாகாணத்தில் விருந்தோம்பல் தொழிற்துறையில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. எதிர்வரும் 2035ம் ஆண்டளவில் மாகாணத்தின் சுற்றுலா கைத்தொழிற்துறையை இரண்டு மடங்காக அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

அல்பேர்ட்டா மாகாணம் இதற்கென பிரத்தியேகமான ஓர் குடிவரவு திட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

விருந்தோம்பல் தொழிற்துறைசார் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கனடாவில் ஏற்கனவே தற்காலிக அடிப்படையில் சுற்றுலாத்துறை தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டுப் பிரஜைகள், நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.