பயங்கரவாத அச்சுறுத்தல் - பாதுகாப்பு படையினரை அதிகாரிக்கு பிரான்ஸ்: இன்றைய முக்கிய உலகச் செய்திகள்

OruvanOruvan

பயங்கரவாத அச்சுறுத்தல் - பாதுகாப்பு படையினரை அதிகாரிக்கு பிரான்ஸ்

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், மேலும் 4,000 வீரர்களை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) தெரிவித்துள்ளார். மொஸ்கோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸில் பயங்கரவாத அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் - சீனப் பிரஜைகள் ஐவர் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் சீனப் பிரஜைகளின் வாகன பேரணி மீது நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சீனப் பிரஜைகள் ஐவர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமாபாத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு சீன பொறியியலாளர்கள்,பேரணியாக சென்ற போது தற்கொலை குண்டுதாரி வாகனத்தின் மீது மோதியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸா போர் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,333 ஆக அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களுக்கிடையில் 107 பேர் உயிரிழந்துள்ளதுடன் 176 பேர் காயமடைந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒக்டோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,333 ஆக அதிகரித்துள்ளதுடன் குறைந்தது 74,694 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பானில் வட்டி வீதங்கள் அதிகரிப்பு

ஜப்பான் வட்டி வீதத்தினை கடந்த வாரம் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அதிகரிப்பு காணப்படுகின்றது.நாணயக் கொள்கையில் வரலாற்று ரீதியான மாற்றம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க விஜயத்தை இடை நிறுத்திய இஸ்ரேலிய பிரதமர்

இஸ்ரேல் உயர் மட்டக் குழுவொன்று தனது நாட்டிற்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தினை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடை நிறுத்தியமையானது தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.