“இந்தியா எங்களின் நெருங்கிய நட்பு நாடு “: மாலைத்தீவு ஜனாதிபதியின் கொள்கையில் திடீர் மாற்றம்

OruvanOruvan

"India is our closest friend" - Maldives president

இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்குமான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், “இந்தியா தங்களது நெருங்கிய நட்பு நாடு” என மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.

சீன ஆதரவாளர் என கூறப்படும் தற்போதைய மாலைத்தீவு ஜனாதிபதியான முகமது மூயிஸ் இந்தியாவுடன் சுமுகமான உறவை கொண்டிராதவர்.

“தான் ஆட்சிக்கு வந்தால் மாலைத்தீவில் இருந்து இந்திய இராணுவ வீரர்களை விரட்டியடிப்பேன்” என தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர் கூறியிருக்கின்றார்.

இதேவேளை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டிய இந்தியாவுடனான HYDROGRAPHIC SURVE ஒப்பந்தத்தை இனி புதுப்பிக்கப்போவதில்லை எனவும் மாலைத்தீவு அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

ஆட்சிபீடமேறியதிலிருந்து மாலைத்தீவு தீவு ஜனாதிபதி இந்திய எதிர்ப்பு கொள்கையை மிகவும் தீவிரமாக கையாண்டதோடு சீனாவாடு கைகோர்த்தார்.

இவ்வாறு இந்தியாவிற்கு எதிராகவே செயற்பட்டு வந்த மூயிஸ் தற்போது “இந்தியா எங்களின் நெருங்கிய நட்பு நாடு” என தெரிவித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

மேலும் மாலைத்தீவில் இந்தியா எண்ணிலடங்கா திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாகவும் புகழ்ந்துள்ளார்.

இந்த வருடத்திற்குள் மாலைத்தீவு 400 மில்லியன் டொலர் கடனை இந்தியாவிற்கு திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில்,கடன் செலுத்த வேண்டிய நிர்பந்ததில் காலவகாசத்தை நீடிப்பதற்கான மூயிஸின் முயற்சியென இந்தியா சந்தேகிக்கின்றது.

இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்குமான இராஜதந்திர உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மாலைத்தீவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.