நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் இரண்டு பில்லியன் மக்கள்: உலகம் முழுவதும் தீவிரமடையும் அபாயம்

OruvanOruvan

Two billion people face water scarcity

உலக மக்கள் தொகையில் 2.2 பில்லியன் மக்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றமை குறித்து ஐக்கிய நாடுகளின் சபையின் அண்மைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நீர் பற்றாக்குறைக்கு உலகில் அதிகரித்து வரும் மோதல்களும் காரணம் என ஐ.நா வலியுறுத்துகிறது.

சுமார் 3.5 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான சுகாதார வசதிகளை வழங்கும் திறன் இல்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, நீர் பற்றாக்குறையால் பெண்களும், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள நாடுகளே உலகளாவிய நீர் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

22 ஆபிரிக்க நாடுகளில் 19 நாடுகள் நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அறிக்கைகளின்படி, உலகில் 153 நாடுகள் பொதுவாக நீர் வளங்களை பயன்படுத்துகின்றன.

இருப்பினும், 24 நாடுகள் மாத்திரமே நீர் ஆதாரங்களை அனுமதியுடன் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு உலகம் முழுவதும் மோதல்கள் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, காலநிலை மாற்றமும் நீர் பற்றாக்குறையில் அதிகம் தாக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.