உக்ரைனின் மின்சார கட்டமைப்பின் மீது தாக்குதல்: மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

OruvanOruvan

Russia

ரஷ்யா, உக்ரையின் சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்திவருவதாக ஜனாதிபதி விளாடிமீர் செலன்ஸ்கி (Zelenskiy) குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த இரண்டு வருட ஆயுத மோதலில் சக்தி உற்பத்தி நிலையங்களை நோக்கி சுமார் 150 ஏவுகணை மற்றும் ஆளில்ல விமானங்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதல்கள் சம்பவங்கள் காரணமாக இதுவரை ஐந்து போர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அவசர மின்சார உதவிகளை ரோமானியா, போலந்து,ஸ்லோவாக்கியா, போன்ற நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள உக்ரைய்ன் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல் நடந்த காலப்பகுதியில் அதன் மின்சார உற்பத்தி நிலையத்தின் மீது உக்ரைய்ன் தாக்குதல் நடத்தியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.