ஜப்பான் தேசிய பாதுகாப்பு குறித்து புதிய உத்தி: இராஜதந்திர உறவை பலப்படுத்த முயற்சி

OruvanOruvan

Japan PM

இராஜதந்திர உறவுகள் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்தவுள்ளதாக ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ (Kishida Fumio) உறுதியளித்துள்ளார்.ஜப்பான் தேசிய ஒலிபரப்பு சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பை பலப்படுத்துவதன் ஊடாக நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடுபூராகவும் இராணுவத்தை நிறுத்தி பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றுவருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு நாடாக காணப்படும் ஜப்பான், உக்ரைய்ன் மீதான ரஷ்யாவின் மோதலுக்கு எதிராக நிலைப்பாட்டில் உள்ளது.

உக்ரைய்னுக்கு நிதிப்பங்களிப்பு வழங்குவது மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளில் இணைந்து கொள்வது என ஜப்பான் செயற்பட்டுவருகின்றது.