காசா தொடர்பில் பாதுகாப்புச் சபையில் கோரிக்கை: அமெரிக்கா புதிய நகர்வு

OruvanOruvan

UN Security Council

காசாவில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி சமாதான உடன்படிக்கைக்கு செல்லுவதை அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது.

பாதுகாப்புச்சபையில் இந்த கோரிக்கையை இன்றைய தினம் அமெரிக்க பிரதிநிதிகள் முன்வைக்கவுள்ளனர்.

இதேவேளை பணயக்கைதிகளின் பரிமாற்றத்தை உடனடியாக மேற்கொள்ளவதையும் வலியுறுத்தவுள்ளது.

மேலும் காசாவில் மனித அவலத்திற்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் இஸ்ரேல் இடமளிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கான பேச்சாளர் நற் இவன் (Nate Evans) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை 15 பேர் கொண்ட பாதுகாப்புச் சபையில் இந்த கோரிக்கையை முன்வைக்கப்படவுள்ளது.