ஜெய்ப்பூரில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ - ஐந்து பேர் உயிரிழப்பு: உலகின் முக்கிய செய்திகள்

OruvanOruvan

ஜெய்ப்பூரில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ - ஐந்து பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் - ஜெய்ப்பூரில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர். ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கவிதாவின் அமலாக்கத்துறை காவல் நீடிப்பு

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் அமலாக்கத்துறை காவல் நீடிக்கப்பட்டுள்ளது.டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.இதன்படி, மேலும் 3 நாட்களுக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைக்கேடு வழக்கில் கடந்த 15 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

OruvanOruvan

உலகின் மிக மாசுபட்ட நகரமாக புதுடில்லி

உலகளாவிய ரீதியில் கடந்த 2023ஆம் ஆண்டில் அதிகளவில் மாசுபட்ட நகரமாக இந்தியாவின் புதுடில்லி நகரம் மாறியுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

புதுடில்லியில் நிலவும் வாயு மாசுபாடு காரணமாக நுரையீரல் தொடர்பான நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டாவாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயம்

கனடா - ஒட்டாவா Westboro பகுதியில் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தள்ளார். குறித்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒன்றாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மொஸ்கோ பயங்கரவாத தாக்குதல் - தகவல் திரட்டும் புடின்

மொஸ்கோவிற்கு அருகிலுள்ள குரோகஸ் சிட்டி அரங்கில் இடம்பெற்ற பயங்கரவாத சம்பவம் குறித்த வழக்கமான தகவல்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெறுகிறார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். அந்த அரங்களில் நடந்தவை குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இளவரசி கேட் விரைவில் குணமடைய ஹாரி மற்றும் மேகன் வாழ்த்து

புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தெரிவித்துள்ளனர். இளவசரி கேட் ஆரோக்கியமான முறையில் விரைவில் குணமடைய வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வேல்ஸ் இளவரசி தொடர்பில் மன்னர் சார்லஸ் பெருமிதம்

வேல்ஸ் இளவரசி கேட், தனக்கு புற்றுநோய் இருப்பது தொடர்பில் தைரியமாகப் பேசியமை குறித்து தான் பெருமைப்படுவதாக பிரித்தானிய மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார். கேட்டின் தைரியத்திற்காக மன்னர் மிகவும் பெருமைப்படுவதாகவும், கடந்த வாரங்கள் முழுவதும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும்" பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.