காந்தஹார் நகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 21 பேர் உயிரிழப்பு: பலர் படுகாயம்

OruvanOruvan

Suicide bomb attack in Kandahar city kills 21 people

தெற்கு ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, குறித்த தாக்கதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இந்த தற்கொலைத் தாக்குதல் சுமார் 08:00 மணிக்கு (03:30 GMT) நகர மையத்தில் அமைந்துள்ள வங்கியில் நடந்ததாக தலிபான்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடந்த மிகப்பெரிய தாக்குதலை தாங்கள் நடத்தியதாக எந்த குழுவும் இதுவரை கூறவில்லை.

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்த கிளையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்த சுமார் 50 பேர் மிர்வாய்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பித்தக்கது.