உக்ரைன் தொழில் நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: ஐவர் உயிரிழப்பு

OruvanOruvan

Kharkiv

உக்ரைனின் வடக்கு நகரான கார்கிவ் (Kharkiv) உள்ள தொழிற்சாலைப் பகுதியில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.குறித்த தாக்குதல் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அச்சகப் பகுதியில் பாரிய புகைமண்டலம் ஏற்பட்டிருந்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கார்கிவ்வின் நகர மேயர் இகோர் ரெரகோவ் (Ihor Terekhov) கருத்துத் தெரிவிக்கையில், தாக்குதல் சம்பவத்தில் சிக்கி ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உக்ரைன் அண்மையில் ரஷ்யாவின் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாாக்கல் நடத்தில் அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.