பிரித்தானியா நோக்கிச் சென்ற குடியேற்றவாசிகள்: நடுக்கடலில் தடுத்து நிறுத்திய பிரான்ஸ் பொலிஸார்

OruvanOruvan

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முறப்பட்ட குடியேற்றவாசிகளை பிரான்ஸ் தேசிய காவல்துறையில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

'இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை Wimereux இல் உள்ள ஸ்லாக் பகுதியில், சட்டவிரோதமாக கடல் கடந்து செல்ல முயன்ற நான்கு புலம்பெயர்ந்த படகுகளை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் நிரம்பியிருந்த சிறிய படகு, நேற்று காலை வடக்கு பிரான்சில் உள்ள சங்கேட் கடற்கரையில் இருந்து பயணத்தை தொடங்கியதாக கூறப்படுகின்றது.

இந்தக் குழுவினர் இலக்கின்றி ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டிருந்த போது பிரான்ஸ் காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகள் உயிர் பாதுகாப்பு அங்கியை அணிந்திருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.