மத்திய பாதுகாப்பு சேவையிடம் புட்டின் விசேட கோரிக்கை: பொருளாதார தடைகளை நீக்க அழுத்தம்

OruvanOruvan

Federal Security Service

பொருளாதார தடைகளை உடைத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்புக்களை வழங்குமாறு மத்திய பாதுகாப்பு சேவையிடம் (Federal Security Service) ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் சகல பொருளாதார நிறுவனங்களும் பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உலக அரங்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார தொய்வுநிலையை சரி செய்வதற்கு மத்திய பாதுகாப்பு சேவை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரெய்ன் மீது ரஷ்யா மேற்கொண்ட வலிந்த இராணுவ நடவடிக்கை காரணமாக மேற்கு நாடுகள் பொருளாதார தடையினை ஏற்படுத்தியுள்ளன.

இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கி கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.ஆனாலும் போர் நிறுத்தம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.