கொங்கோங்வில் புதிய பாதுகாப்பு சட்டம்: தேசத்துரோகத்திற்கு ஆயுள் தண்டனை
கொங்கோங் (Hong Kong) பாராளுமன்றத்தில் தேசிய பாதுகாப்பு குறித்தான புதிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இன்றையதினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல்கள் நெருக்கடியாக மாறியுள்ள நிலையில் இந்த சட்டம் நிறைவேறியுள்ளது.
குறித்த சட்டத்தின் உறுப்புரை 23 இல், தேசதுரோகம்,உளவுபார்த்தல், நாசவேலை செய்தல் மற்றும் அரச இரகசியங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக ஆயுள் தண்டனை வழங்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் கடந்த எட்டாம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த சடடம் குறித்து கருத்து வெளியிட்ட அரச தலைவர் ஜோன் லீ (John Lee) இது ஒரு வரலாற்று தருணம் என குறிப்பிட்டுள்ளார்.