டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தில் விவேக் ராமசாமிக்கு உயரிய பதவி?: துணை ஜனாதிபதி பதவி நிராகரிப்பு

OruvanOruvan

2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னணியில் இருக்கும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், விவேக் ராமசாமியை துணை ஜனாதிபதியாக்கும் யோசனையை அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளார்.

எனினும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், 38 வயதான விவேக் ராமசாமிக்கு தனது அமைச்சரவையில் முக்கிய பதவி ஒன்றை வழங்க ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நன்கு அறிந்த ஒருவர் நியூயார்க் போஸ்டுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக போட்டியிட்ட அவர், ஜனவரி 15 ஆம் திகதி அதிலிருந்து பின்வாங்கினார்.

ட்ரம்ப்புடனான அவரது நெருங்கிய உறவுகளின் காரணமாக துணை ஜனாதிபதி வேட்பாளராக விவேக் ராமசாமியை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஊகங்கள் இருந்தன.

எனினும், ட்ரம்ப் தனது துணை ஜனாதிபதி குறித்து இரகசியம் காத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் ராமசாமிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் பதவி?

இதனிடையே, விவேக் ராமசாமிக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்குவதற்கான சாத்தியகூறுகள் தொடர்பில் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளிகள் சிலர், ராமசாமியின் வலுவான பொதுப் பேச்சுத் திறன், அந்தப் பணிக்கு ராமசாமி மிகவும் பொருத்தமானவர் என்று நம்புகிறார்கள்.

ப்ளூம்பெர்க் கருத்துப்படி, டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள இது உதவும் என்று அவர்கள் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த விவேக் ராமசாமியின் செய்தித் தொடர்பாளர் டிரிசியா மெக்லாலின், “விவேக்கின் முக்கிய கவனம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்வதாகும்” என்றார்.

இதன் மூலம் அமெரிக்காவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்" என்று ராமசாமியின் செய்தித் தொடர்பாளர் டிரிசியா மெக்லாலின் நியூயார்க் போஸ்ட்டிற்கு பதிலளித்தார்.

“அடுத்த நிர்வாகத்திலும் அதற்கு அப்பாலும் அவர் பணியாற்றுவது நாட்டிற்கு அதிர்ஷ்டமாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.