தாய்வானை அச்சுறுத்தும் சீனா: தென்சீனக் கடலில் மிரட்டும் கடற்படை தளம்

OruvanOruvan

Taiwan Foreign Minister Joseph Wu

தாய்வானைச் சுற்றி சீனா கடற்படைத் தளங்களை அமைத்துள்ளமையானது மிகவும் அச்சறுத்தலான விடயம் என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசேப் வு (Joseph Wu) தெரிவித்துள்ளார். தலைநகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்சீனக் கடல் பகுதியில் தாய்வானை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதன் அருகாமையில் மூன்று கடற்படைத் தளங்களை சீனா அமைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா மற்றும் தாய்வான் ஆகிய இரு நாடுகளும் தென் சீனக் கடலின் பெரும்பகுதி தங்களுக்குச் சொந்தமானது என வலியுறுத்திவருகின்றன. ஆனால், தாய்வான் இடு அபா (Itu Aba) எனப்படும் தீவினை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த நிலையில் தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துவருகின்றமையானது தாய்வானின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமைந்துவருவதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.