பிரசாரத்திற்காக பிரதமர் மோடி விமானப்படை ஹெலிகப்டரை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...
பிரசாரத்திற்காக பிரதமர் மோடி விமானப்படை ஹெலிகப்டரை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
தேர்தல் பிரசாரத்திற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்திய விமானப்படையின் ஹெலிகப்டரை பயன்படுத்தி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
அம்பானி வீட்டுத் திருமணக் கொண்டாட்டத்தில் திருட்டு - 5 பேர் கைது
அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் சுமார் 16,140 வெள்ளிப் பணத்தையும் மடிக்கணினியையும் திருடிச் சென்ற சந்தேகநபர்கள் ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் புதுடில்லியில் வைத்து குஜராத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 5.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 17 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்த கேட் மிடில்டன்- இணையத்தில் வைரலாகும் காணொளி
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்தார். இந்நிலையில், பொதுவெளியில் இளவரசர் வில்லியமுடன், கேட் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படுவது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
புட்டினுக்கு மோடி வாழ்த்து
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் 87.29 சதவீத வாக்குகளை பெற்று ஐந்தாவது முறையாகவும் விளாடிமிர் புட்டின் வெற்றிப்பெற்றுள்ளார். ‘‘ரஷ்யாவின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புட்டினுக்கு அன்பான வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்காக எதிர்நோக்கியுள்ளேன் என தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 3,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியிருப்பதாய்ச் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பலத்த காற்றால் காட்டுத் தீ பல பகுதிகளுக்குப் பரவியுள்ளது.தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு அதிகாரிகள் மும்முரமாக செயற்பட்டு வருவதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் குண்டு தாக்குதல்- ஏழு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்டிகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் நேற்று பாகிஸ்தான் இராணுவ விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்கியதில் ஏழு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.