தென்கொரியாவில் திருமணம் அதிகரிப்பு: உலகில் பிறப்பு வீதம் வீழ்ச்சி

OruvanOruvan

South Korea

தென்கொரியாவில் திருமணம் செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக திருமணம் பதிவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.இதேவேளை இளைய சமூகம் மிகவும் வேமாக முதுமையடைந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் கருவுற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் உலகத்தில் குறைவான சிசு பிறப்பு வீதம் கடந்த 2023 இல் பதிவாகியுள்ளது. தொழில் முன்னேற்றம் மற்றும் பிள்ளை வளர்ப்பில் ஏற்பட்ட அதிக செலவு காரணமாக பிறப்பு வீதம் குறைந்துள்ளது.

அதேவேளை பெண்கள் குழந்தைகளை பெறுவதில் ஆர்வம் காட்டாமையும் பிறப்பு வீத வீழ்ச்சிக்கு காரணம் என சொல்லப்படுகின்றது.