சீனாவில் பிறப்பு வீதம் வீழ்ச்சி: குழந்தைகளுக்கான சேவை நிறுத்தம்

OruvanOruvan

China

பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்தமையினால் சீனாவில் உள்ள பல வைத்தியசாலைகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கும் சேவைகளை நிறுத்தியுள்ளன. இதனை டெய்லி எகனாமிக் (Daily Economic) செய்தி நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மற்றும் தெற்கு ஜியாங்சி உட்பட பல்வேறு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் கடந்த இரு மாதங்களில் மகப்பேறு பிரிவுகளை மூடுவதற்கான யோசனையை முன்வைத்துள்ளன.

இந்நிலைமை எதிர்காலத்தில் சீனாவின் பிறப்பு விகிதம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில்வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் தென்கொரியாவில் திருமணம் செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் உயர்வடைந்துள்ளது.