ஹமாஸ் இராணுவத் தலைவர் கொல்லப்பட்டார்: வெள்ளை மாளிகை அதிரடி அறிவிப்பு
ஹமாஸ் அமைப்பின் மூத்த இராணுவத் தளபதி மவான் இசா இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமுக்குச் சொந்தமான சுரங்கப்பாதை வளாகத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் இசா கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து உயிரிழந்த ஹமாஸின் மூத்த தலைவர் இசா ஆவார்.
ஹமாஸ் இராணுவப் பிரிவின் துணைத் தளபதியான இசா, இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
ஹமாஸ் தலைவரை அதன் பயங்கரவாத தடுப்புப்பட்டியலில் வைத்த ஐரோப்பிய ஒன்றியம், சுமார் 1,200 பேரைக் கொன்ற ஹமாஸ் தலைமையிலான ஒக்டோபர் 7 தாக்குதல்களுடன் அவரை நேரடியாக தொடர்புபடுத்தியுள்ளது.
ஒக்டோபர் 7 முதல், ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் பலரை இஸ்ரேலிய இராணுவம் கொன்றுள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியேவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஹமாஸின் அரசியல் தலைவர் சலே அல்-அரோரி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என நம்பப்படுகிறது.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுல்லிவன், ஏனைய ஹமாஸ் தலைவர்கள் காசாவில் உள்ள "ஹமாஸ் சுரங்கப்பாதை வலையமைப்பில்" மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது என்றார்.
காசா பகுதியை ஆளும் பாலஸ்தீனிய குழு, இசாவின் மரணம் குறித்த செய்திகள் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
இதனிடையே, காசாவில் மோதல் வெடித்ததில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்த வாரம் மத்திய கிழக்கு நோக்கி செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.