சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் புதிய தீர்ப்பு: பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம்

OruvanOruvan

Climate protesters

குற்றவியல் விடயங்களுக்கு குற்றம்சாட்டப்பட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தங்களது அரசியல் மற்றும் தத்துவார்த்தை நம்பிக்கையை தமக்கான பாதுகாப்பாக கருத்த முடியாது என பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை போராட்டக்காரர்களின் நேரடி நடவடிக்கைகளுக்கு எதிராக தண்டனை வழங்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பருவநிலை மாற்றம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக செயற்படும் சில அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.