ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகத்திற்கு முரண்: மேற்கு நாடுகள் குற்றச்சாட்டு

OruvanOruvan

Putin

ரஷ்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என மேற்கு நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

ஆனாலும் சீனா, இந்தியா வட கொரியா ஆகிய நாடுகள் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள பிளடிமீர் புட்டினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன.

புட்டின் எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார். ரஷ்யா, உக்ரெய்னுடன் போர் தொடுத்து இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில், மேற்கு நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலை நேரடியாக விமர்சித்துவருகின்றன.

இதேவேளை ரஷ்ய மக்கள் மேற்கு நாடுகளின் போக்கிற்கு எதிரான போக்கை கொண்டுள்ள புட்டினுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.