மக்களின் ஆணை கொள்ளையிடப்படுவது தேச துரோகத்துக்கு சமம்: நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இம்ரான் கான்

OruvanOruvan

Imran khan

மக்கள் ஆணையை கொள்ளையடித்த அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.

அறக்கட்டளை ஊழல் வழக்கு விசாரணைக்க்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

"முதலில் தமது கட்சி சின்னம் சதி செய்து முடக்கப்பட்டதாகவும் தேர்தலுக்கு பின்னர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பங்கு பறிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த இம்ரான் கான்,

மக்களின் ஆணை கொள்ளையிடப்பட்டிருப்பது அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமமானது."

நடைபெற்ற தேர்தலில் எனது கட்சியினர் மாத்திரம் மூன்று கோடி வாக்குகளை பெற்றனர். இதே வாக்குகளை,தேர்தலை சந்தித்த ஏனைய 17 கட்சிகளும் கூட்டாக பெற்றன.

தேசிய சபை மற்றும் மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டு தொடர்பில் பெஷாவர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளோம்.

பி.டி.ஐ. கட்சி இடங்களை தேர்தல் ஆணையம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்க முடியாது," என மேலும் கூறியுள்ளார்.