பீகார் மாநிலத்தில் வாகன விபத்து - 08 பேர் உயிரிழப்பு: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - World News

பீகார் மாநிலத்தில் வாகன விபத்து - 08 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 03 குழந்தைகள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ககாரியா மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கனரக வாகனமொன்றும் ஜீப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்தை முறித்த நைஜர்

அமெரிக்காவுடனான தனது இராணுவ ஒப்பந்தத்தை உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக நைஜர் இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமடூ அப்த்ரமேனின் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் - 08 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 03 குழந்தைகள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை “இறையாண்மை மீறல்“ என தலிபான அரசு கண்டித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

OruvanOruvan

சீனாவில் நான்கு அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

சீனாவில் மிகவும் அரிதான நிகழ்வாக நான்கு அங்குல வாலுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், குழந்தையின் முதுகில் இருந்து இந்தப் பகுதியை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர் வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இந்தப் பகுதி குழந்தையின் நரம்பு மண்டலத்துடன் இணைந்துள்ளதால் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

OruvanOruvan

Baby born with a tail in China

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் சட்டத்தரணி

அவுஸ்திரேலியா, சிட்னி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தாக்குதலுக்குள்ளாகிய இளம் சட்டத்தரணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.28 வயதான Mitch East என்ற சட்டத்தரணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை மீட்ட இந்தியா

சோமாலிய கடற்கொள்ளையர்களால் 17 பணியாளர்களுடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது. இதன்போது 35 கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏடன் வளைகுடாவில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலொன்றை சர்வதேச கடற்படை மீட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நிறைவு

கனடா - ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன. கனடாவின் பௌத்த பேரவை, ஒட்டாவாவின் ஹில்டா ஜயவர்தனராமம் நன்கொடையாளர் சபை மற்றும் கனடாவில் வாழும் இலங்கையர்கள் மற்றும் கனேடிய சமூகத்தினரின் பங்களிப்புடன் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய தேர்தலில் புடினுக்கு அமோக வெற்றி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அசாதாரண தேர்தல் வெற்றியின் மூலம் தமது அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளியான தேர்தல் முடிவுகளின்படி புடின் 88 வீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.