புட்டின் மீண்டும் வெற்றி: உக்ரெய்ன் போருக்கு மக்கள் ஆதரவு

OruvanOruvan

Putin

ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் வெள்ளியன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். மூன்றாவது தடைவையாகவும் அவர் பதவி ஏற்றுள்ளார்.எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கு பதவிக்காலம் வழற்கப்பட்டுள்ளது.

உக்ரெய்னுக்கு எதிரான போரில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் காட்டிவரும் தீவிரத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளமை இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாத புட்டினுக்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புலனாய்வு அதிகாரியான லெப்டினல் கேணல் புட்டின் 1999 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றிருந்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற அவர், 2008 இல் இலிருந்து 2012 வரை ஜனாதிபதியாக செயற்பட்டிருந்தார்.

இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட புட்டின், 2021 ஏப்ரல் மாதம் மக்கள் தீர்ப்பு மூலம் அரசியல் அமைப்பு ரீதியாக மாற்றத்தைக் கொண்டுவந்து தமது பதவியை 2036 வரை தக்கவைத்துக் கொள்ள மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் புட்டினின் வெற்றியை மேற்கு நாடுகள் உன்னிப்பாக கவனித்துவருகின்றன.