சீனாவில் திருமணம் செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை மாற்றம்: கொரோனாவிற்கு பின்னர் அதிகரிப்பு
சீனாவில் திருமண முடித்த புதிய தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முன்னைய ஆண்டுகளைவிட கடந்த 2023 ஆம் ஆண்டு 12.04 வீதமாக காணப்படுவதாக சிவில் சேவைகள் அமைச்சு வெளியியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று காரணமாக திருமணம் செய்யும் தம்பதிகளின் எண்ணிகை பாரிய வீழ்ச்சியினைக் கண்டிருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அந்த வகையில் கடந்த வருடம் 7.68 மில்லியன் புதிய தம்பதியினர் பதிவாகியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு 845000 தம்பதியினர் பதிவாகியிருந்தனர்.
இதேவேளை கடந்த 2013 ஆம் ஆண்டு 13.47 மில்லியன் தம்பதியினர் புதிதாக திருமணத்தில் இணைந்துள்ளமை வரலாற்றில் அதிகூடிய பதிவாக காணப்படுகின்றது.