காசாவில் பட்டினி மரணங்கள்: உலக அமைப்புக்கள் எச்சரிக்கை

OruvanOruvan

Gaza

காசா பகுதியில் பாரியளவில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பகுதியில் பஞ்சம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உணவுப்பற்றாக்குறை காரணமாக அதிகளவு இறப்புகள் நிகழக்கூடும் எனவும் யுத்த நிறுத்த உடனடிக்கை ஏற்படாத காரணத்தினால் பாதிப்புக்கள் இன்னும் அதிகமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய பட்டினி கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஒன்றிணைந்த உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கையில், வடக்கு காசாவில் 70 வீதமான மக்களுக்கு உணவு இல்லை எனவும், இது 20 வீத பட்டினி அதிகரிப்பு எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.