போலியான செய்திகள் ஜனநாயகத்திற்கு சவால்: தென்கொரிய ஜனாதிபதி எச்சரிக்கை

OruvanOruvan

Yoon Suk Yeol

போலியான செய்திகள் மற்றும் செயற்கை தொழில்நுட்பம் (AI) தொடர்பான பொய் செய்திகள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை ஜனநாயக விழுமியங்கள் தொடர்பாக , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உட்பட உலகளாவிய அதிகாரிகளுடன் கலந்துரையாடலை தென்கொரிய மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயத்தை மேம்படுத்தும் வகையில், செயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அனுபவங்களையும் அதற்கான தெளிவையும் நாடுகள் தமக்குள் பகிர்ந்து கொள்வது அத்தியவசியமானது எனவும் தென்கொரிய ஜனாதிபதி யூன் குறிப்பிட்டுள்ளார்.

OruvanOruvan

Democracy meeting