பிரான்ஸில் அதிகரிக்கும் கைதிகளின் எண்ணிக்கை: நிலைமை மோசமடைவதாக சிறைச்சாலை கண்காணிப்பகம் எச்சரிக்கை

OruvanOruvan

France prison population reaches

கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதன் காரணமாக ஐரோப்பாவின் மிகவும் நெரிசலான சிறைச்சாலையை கொண்ட நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

இதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் வரையில் 76,258 பேர் பிரான்ஸ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 62,000 பேர் வரை சிறைவைக்கக்கூடிய பகுதியிலேயே குறித்த தொகையினர் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொகையானது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காணப்பட்டதை விட 5.5 வீதம் அதிகமாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இவ்வாறானதொரு நிலைமையினை முன்னதாக எதிர்கொள்ளவில்லை எனவும், இந்த பிரச்சினை புதிது அல்ல என்றபோதும் நிலைமை மோசமடைவதாக சர்வதேச சிறை கண்காணிப்பகத்தின் பிரான்ஸ் கிளையைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த சூழ்நிலையானது கைதிகள் மற்றும் பணியாளர்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக சிறைக்காவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் தற்போது 100,000 பேருக்கு 109 கைதிகள் என்ற அடிப்படையில் சிறைக்கைதிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட கைதிகளின் எண்ணிக்கையை விட குறைவாக காணப்படுகின்ற போதிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட பிரான்ஸில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.