கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு - திருடர்களை பிடிக்க நூதனமுறையை கையாளும் காவல்துறை: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - world news

கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு - திருடர்களை பிடிக்க நூதனமுறையை கையாளும் காவல்துறை

கனடாவின் டொரொண்டோ நகரில் கார் திருட்டு அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி கார் திருட்டை தடுக்க கார் சாவியை காரினுள்ளோ அல்லது வீட்டின் முகப்பிலோ தொங்கவிடுங்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கனடாவின் டொராண்டோ நகரின் புள்ளிவிவரத்தின் படி, கடந்த ஆண்டுகளைவிட 2023ம் ஆண்டில் கிரேட்டர் டொராண்டோ பகுதி முழுவதும் கார் திருட்டுகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளன.

கடலுக்கு அடியில் மின் இணைப்பு சேதம்- மத்திய ஆபிரிக்காவில் இணையத்தடை

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் சில பகுதிகளிலும், கண்டத்தின் தெற்கில் உள்ள சில நாடுகளுக்கும் இயங்கும் நான்கு இணைய மின் இணைப்பு கேபிள்கள் கடந்த 14 ஆம் திகதி முதல் செயலிழந்துள்ளது. இதனையடுத்து மத்திய ஆபிரிக்கா பகுதியில் பெரும் இணையத்தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நைஜுரியா, கோட்டி ஐவரி, லைபீரியா, கானா, புர்கினா பாசோ மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்ட்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டினியை எதிர்கொள்ளபோகும் சூடான் - ஐ.நா. சபை எச்சரிக்கை

சூடானில் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் எதிர்வரும் மாதங்களில் பட்டினியால் பாதிக்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths) எச்சரிக்கை விடுத்துள்ளார்.