இந்தியாவில் வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

World News Updates 17.03.2024

இந்தியாவில் வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் அறியப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு: இரண்டு நாள் பெல்கோரோடில் பாடசாலைகளுக்கு விடுமுறை

ரஷ்யா மீது உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பெல்கோரோடில் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்ந்து நடப்பதால் வணிக வளாகங்கள் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும். பாடசாலை, கல்லூரிகளுக்கு நாளை முதல் இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதானி குழுமம் மீது விசாரணைகளை ஆரம்பித்த அமெரிக்கா

சலுகைகளை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் அதானி குழுமம் மீதான விசாரணையை அமெரிக்கா விரிவுபடுத்தி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிசக்தித் திட்டம் தொடர்பில் சாதகமாக நடந்துகொள்ள இந்தியாவில் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது என புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வருவதாக ‘புளூம்பெர்க்’ செய்தி தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்க விசாரணை குறித்து தங்களுக்கு எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரெய்க்ஜேன்ஸ்சில் வெடிக்க ஆரம்பித்திருக்கும் புதிய எரிமலை

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் புதிய எரிமலை வெடிக்க ஆரம்பித்திருப்பதாக ஐஸ்லாந்திய வானிலை அலுவலகத்தின் (IMO) அறிக்கை தெரிவித்துள்ளது. இது கடந்த டிசம்பருக்குப் பிறகு அந்தப் பகுதியைத் தாக்கிய நான்காவது வெடிப்பு என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

OruvanOruvan

போர்நிறுத்த முன்மொழிவை சமர்ப்பித்துள்ள ஹமாஸ்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய போர்நிறுத்த முன்மொழிவை எகிப்து மற்றும் கத்தாரில் உள்ள மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

உலகிலேயே அதிக நிறை கொண்ட புளூபெர்ரி - கின்னஸ் சாதனை

அவுஸ்திரேலியாவிலுள்ள பண்ணை ஒன்றில் விளையும் புளூபெர்ரி பழம் உலகிலேயே அதிக நிறை கொண்டதாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 4 செமீ அகலமும் 20.4 கிராம் எடையும் கொண்டது. இது சாதாரண சராசரி புளுபெர்ரியை விட 10 மடங்கு பெரியது ஆகும்.

OruvanOruvan

OruvanOruvan

இன்ஸ்டாவில் ட்ரெண்டாகும் வீடியோக்கு எதிராக நிபுணர் எச்சரிக்கை

“பார்பி” என்ற வெற்றிப் படத்திலிருந்து மார்கோட் ராபியின் சின்னமான கால் காட்சியினை பின்பற்றி அதனை ஒரு சேலஞ்ச் வீடியோவாக பயனர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் கால் நிபுணர் வைத்தியர் சாரி பிரைசண்ட், எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானில் இராணுவ நிலையின் மீது தற்கொலைக்குண்டு தாக்குதல்

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பரந்து விரிந்த இராணுவ நிலையின் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுதாரி வெடிபொருள் நிரப்பிய டிரக்கை மோதியதாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.