சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் சிறுவர்கள் பாதிப்பு: பிரித்தானியாவில் புதிய ஆய்வில் அதிர்ச்சி

OruvanOruvan

UK children

நிகழ்வு நிலையில் (online) வருகின்ற வன்முறை அம்சங்களினால் பிரித்தானிய சிறுவர்கள் பாதிப்படைவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய தீங்குகளை ஊக்குவிக்கும் விடயங்கள் ஊடாகவும் சிறுவர்கள் பாதிப்படைவது கண்டறியப்பட்டுள்ளது.

ஆரம்ப பாடசாலைகளில் சிறுவர்கள் இணையத்தளங்களை பயன்படுத்துவதினால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உலக அரங்கில் இது பெரும் சவாலாக மாறிவருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் பாவனையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிப்படுகின்றது.

இவற்றிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.