ஹாங்காங் சட்டமன்றம் முற்றுகை - 12 பேர் கைது: மக்களை சீனாவுக்கு ஒப்படைக்கும் அனுமதிக்கு எதிராக போராட்டம்

OruvanOruvan

Hong Kong protest

கடந்த 2019 ஆம் ஆண்டில் போராட்டங்களினூடாக ஹாங்காங் சட்டமன்றம் முற்றுகையிடப்பட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் கிரிகோரி வோங்கும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை ஆறு ஆண்டுகளுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஹாங்காங் உயர் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, சட்டமன்றத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஊடகவியலாளர்கள் இருவருக்கு அபதாரம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெரும்பாலான எதிர்தரப்பினர் கலவரத்தில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

OruvanOruvan

இந்த கலவரம் 2019 ஆம் ஆண்டுஜூலை மாதம் இடம்பெற்றது.

மக்களை சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு ஒப்படைக்க அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தின் மீது வெடித்த ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களில் இந்த சம்பவம் முக்கிய தருணமாக பார்க்கப்படுகின்றது.

நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கட்டடத்திற்குள் நுழைந்ததோடு சட்டமன்ற வளாகத்தையும் ஆக்கிரமித்தனர்.

இதன்போது,பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டதுடன் நீர்த்தாரை பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.